44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச் செல்ல உள்ளதால் கீழ் கண்ட வழித் தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாடு அரங்கம் வரை ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போக்குவரத்து முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜெஸ் ஒலிம்பியாட் ஜோதியானது மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்து, காமராஜ் சாலை, இராஜாஜி சாலை, கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ரல் சதுக்கம், ஈவேரா சாலை, இராஜமுத்தையா சாலை வழியாக உள்விளையாட்டு அரங்கத்தினை அடைய உள்ளது. இதனால் இந்த வழித்தடங்களுக்கு பதிலாக மாற்றும் வழித்தடங்களை தேர்வு செய்து பொது மக்கள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil