காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட அதே போன்ற கேள்விகள் சோனியாவிடமும் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந் நிலையில், இன்று அவர் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.