Vivo T1x Flipkart: விவோ தனது புதிய விவோ டி1எக்ஸ் பட்ஜெட் போனை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் புராசஸர், 5000mAh பேட்டரி, டிரிப்பிள் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
விவோவின் பட்ஜெட் தொகுப்பில் இந்த போன் சேர்ந்துள்ளது. மொத்தம் மூன்று வகைகளில் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம். சந்தையில் இருக்கும் பட்ஜெட் சாம்சங், ரெட்மி, சியோமி, ஒப்போ போன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் நேரடியாக போட்டியிடும்.
Realme Smartwatch: எல்லாம் இருக்கு; வேறென்ன வேணும்… ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் 3 அறிமுகம்!
விவோ டி1எக்ஸ் போன் விலை மற்றும் சலுகைகள் (Vivo T1x Offer Price)
இதன் 4ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.11,999 ஆகவும், 4ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6ஜிபி + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விவோ ஸ்மார்ட்போனானது கிராவிட்டி பிளாக், ஸ்பேஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஜூலை 27ஆம் தேதியான இன்று முதல் விற்பனை தொடங்கியது. விற்பனை தின சலுகையாக HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. விவோ தளத்தில் முன்பதிவு செய்தால் இலவசமாக விவோ XE160 இயர்ஃபோனும் பயனர்களுக்கு கிடைக்கும்.
விவோ டி1எக்ஸ் அம்சங்கள் (Vivo T1x Features)
6.5 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளேஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்8ஜிபி வரை ரேம்128ஜிபி வரையிலான சேமிப்பகம்50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் பின்பக்க கேமரா8 மெகாபிக்சல் செல்பி கேமரா5000mAh பேட்டரி / 18W பாஸ்ட் சார்ஜிங்
Vivo T1x 4G ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி பிளஸ் (1080×2408 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி வரை ரேம் உள்ளது. இதில் 128 ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் மெமரி ஆதரவு உள்ளது.
மேலதிக செய்தி:
Flipkart Offers: சிறந்த ஆஃபர்களுடன் டாப் 10 பட்டியலில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்!
விவோ டி1எக்ஸ் மொபைல் 5000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படும். இதனை ஊக்குவிக்க 18W வேகமாக சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும். இதில் 50 மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரண்டு பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.