5G Spectrum Auction Bidding Day 1: இந்தியாவில் 5ஜி அலைக்கற்றுகான ஏலத்தின் இரண்டாவது நாளில் நாம் இருக்கிறோம். இந்த நேரத்தில் முதல் நாளில் எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை மெகாஹெர்ஸை ஏலம் எடுத்துள்ளது, இதுவரை எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாகக் காணலாம்.
வெளியான தகவலில்படி, ஜியோ 700 MHz அலைக்கற்றை பெற முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. 700 MHz என்பது பயனர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க உதவும் ஃபிரிகுவன்சி என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அதிக தொகை செலவிட வேண்டும் என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் இதன் பக்கமே போகாது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.801 பில்லியன் மதிப்பிலான அதிகபட்ச ஏலத்தில் ஈடுபட்டுள்ளது. 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 10 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஜியோ தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இப்போது வரை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், அதிலிருந்து விலகி இருக்கின்றன.
Realme Pad X 5G: புதிய ரியல்மி டேப்லெட் அறிமுகம் – அம்சங்கள் எல்லாம் டாப் டக்கர்!
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் பார்தி ஏர்டெல் ரூ.450 பில்லியன் மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை தேர்வு செய்திருக்கலாம் என்றும், அதே நேரத்தில் வோடபோன் ஐடியா ஸ்பெக்ட்ரத்திற்காக ரூ.184 பில்லியன் செலவழிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏலத்தின் முதல் நாளில், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகாஹெர்ட்ஸ் பட்டைகள் உள்பட பல அலைக்கற்றைகளுக்கு ஏலம் பெறப்பட்டது.
இது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜியை அறிமுகப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், 4ஜியில் உள்ள சேவை குறைபாடுகளைக் குறைக்கவும் உதவும்.
ஏலத்தில் அதிகளவு செலவு செய்யும் ரிலையன்ஸ் ஜியோ
ஜியோ இதுவரை ரூ.810 பில்லியன் செலவழித்திருக்கலாம். இது அதன் அடிப்படை மதிப்பீட்டை விட 2 மடங்கு அதிகமாகும். 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றில், 10 மெகா ஹெர்ட்ஸ் ரூ.393 பில்லியனுக்கு ஜியோவால் வாங்கப்பட்டது. இதுவே, விலையுயர்ந்த ஏலத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ 3300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் (ஒரு வட்டத்திற்கு 100 மெகா ஹெர்ட்ஸ்) 2200 மெகா ஹெர்ட்ஸ்-ஐ ரூ.317 பில்லியனுக்கும், 26 GHz அலைவரிசையில் 17600 MHz அளவை ரூ.56 பில்லியனுக்கும், ஜியோ 800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில், 20 மெகா ஹெர்ட்ஸை ரூ.10.6 பில்லியனுக்கும், 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் 20 மெகா ஹெர்ட்ஸ் ரூ.25 பில்லியனுக்கும் வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜியோவுக்கு அடுத்ததாக களத்தில் ஜொலிக்கும் பார்தி ஏர்டெல்
ஏர்டெல் 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ரூ.3.6 பில்லியனுக்கு வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இது தவிர, தொலைத்தொடர்பு நிறுவனம் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 44 மெகா ஹெர்ட்ஸ் அளவை ரூ.47 பில்லியனுக்கும், 2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 30 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை ரூ.27 பில்லியனுக்கு எடுத்திருக்கலாம்.
மேலும், 3300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில், ஏர்டெல் ரூ. 317 பில்லியனுக்கு 2200 மெகா ஹெர்ட்ஸையும், 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 17600 மெகா ஹெர்ட்ஸ் அளவை ரூ. 56 பில்லியனுக்கும் வாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் மொத்த செலவு ரூ.380 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்ததை விட 20% விழுக்காடு அதிகபட்ச தொகையாகும்.