கனடாவில் வாழும் உறவினரிடம் வந்த போன் அழைப்பால் நபர் ஒருவர் பணத்தை இழந்துள்ள சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சுர்ஜித் சிங்குக்கு சமீபத்தில் ஒரு போன் வந்தது.
அதில் பேசிய நபர் நான் கனடாவில் இருந்து உங்கள் உறவினர் பேசுகிறேன் என கூற அதை சுர்ஜித் நம்பியுள்ளார்.
பின்னர் கனடாவில் சில சட்டச் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறேன்.
வழக்கறிஞரிடம் பணம் செலுத்த பணம் தேவைப்படுவதால் கொஞ்சம் பணம் அனுப்பச் சொன்னார்.
GETTY IMAGES
இன்னும் சில நாட்களில் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் இது குறித்து தனது பெற்றோரிடம் கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவரின் வங்கிக்கணக்குக்கு சுர்ஜித் ரூ.70,000 அனுப்பினார்.
பணப் பரிமாற்றம் செய்த பிறகு தான் கனடாவில் இருந்து பேசியவர் தன் உறவினர் இல்லை என்பதை அறிந்து சுர்ஜித் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.