வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடையை மேற்கொள்வதற்காக,70,000 லீற்றர் டீசலை எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை எரிசக்கதி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு இணைந்து மேற்கொண்டுள்ளன.
சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
முதற்கட்ட அறுவடையை ஆரம்பித்துள்ள 20 கமநலசேவை பிரிவுகளுக்கு இன்று (27) இவ்வாறு டீசல் வழங்கப்படுவருகின்றன.
6750 ஏக்கர் நெற்பயிர் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதாகவும் மிகுதி அறுவடைக்குத்தேவையான டீசல் கமநலசேவை பிரிவுகளுக்கு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்ர தெரிவித்துள்ளார்.