சட்டவிரோதமான முறையில் 1900 லீற்றர் டீசல் பதுக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஹம்பாந்தோட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (25) இரவு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குறித்த டீசல் தொகை, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்த டீசல் தொகையை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு நேற்று (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்