இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மோசமான சேவை தரத்துடன் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்காக முக்கியமான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் போலவே கூகுள், மைக்ரோசாப்ட்.. கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..!
பிஎஸ்என்எல் – பிபிஎன்எல் இணைப்பு
மத்திய அமைச்சரவை புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்)-ஐ மத்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க ஒப்புதல் அளித்தது உள்ளது.
ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்
இந்த இணைப்பின் மூலம், BSNL நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 5.67 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்-ஐ பெறுகிறது. இந்த ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் நாட்டிலுள்ள 1.85 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் (USOF) மூலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது BSNL நிறுவனம் 6.83 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.
1.64 லட்சம் கோடி ரூபாய்
மேலும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 1,64,156 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சரிவில் இருந்து மீண்டு வர புத்துயிர் பேக்கேஜ் அறிவித்தார். இதுபோன்று கடைசி மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
3 முக்கியமான விஷயங்கள்
இந்த முதலீட்டை வைத்து பிஎஸ்என்எல் 3 முக்கியமான விஷயங்களைச் செய்ய உள்ளது.முதலில் பிஎஸ்என்எல் தனது சேவை மற்றும் தரத்தை மேம்படுத்துவது, இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்துவது, பிஎஸ்என்எல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்-ஐ விரிவாக்கம் செய்வது
ஏப்ரல் 2022
இந்தியா கிராமங்களில் இண்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்) நிறுவனத்திற்கு SPV-ஐ ஏப்ரல் 2022-ல் உருவாக்கியது. இதன் வாயிலாகத் தான் தற்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் இணைக்க ஒப்புதல் அளித்தது உள்ளது.
சவுதி அரோபியா-வின் பிரம்மாண்ட திட்டம் NEOM.. 80 பில்லியன் டாலர் ஒத்துக்கீடு..!
BSNL: Modi Govt approves revival package of 1.64 lakh crore, clears BSNL-BBNL merger
BSNL: Modi Govt approves revival package of 1.64 lakh crore, clears BSNL-BBNL merger BSNL: 1.64 லட்சம் கோடி உதவி தொகை, BBNL உடன் இணைப்பு..!