சிக்கமகளூரு : காங்கிரசில் அடுத்த முதல்வர் யார் என்ற விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிக்கமகளூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட, தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர், 1 லட்சம் ரூபாய் பேரம் பேசிய தகவல், கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் சிக்கமகளூரு மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. சிக்கமகளூரில் 35 வார்டுகளில், 18 வார்டுகளில் பா.ஜ.,; காங்கிரஸ் 12; ம.ஜ.த., 2; எஸ்.டி.பி.ஐ., 1; சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.தேர்தல் நேரத்தின் போது, தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், கட்சி பிரமுகர் ஒருவரிடம் சீட் கொடுப்பது தொடர்பாக, மொபைல் போனில் பேசுகிறானர்.
அதன் விபரம்:சீனிவாஸ்: சிக்கமகளூரு கார்ப்பரேஷன் தேர்தலில் சீட் வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாயும்; தேசிய தலைவருக்கு 5,௦௦௦ ரூபாயும் வேண்டும்.சீட் கேட்பவர்: ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். எனக்கே சீட் வாங்கித்தர வேண்டும்.சீனிவாஸ்: பணத்தை, ‘சாந்தி மெடிக்கல் ஸ்டோர்’ கடை அருகில் வந்து தர வேண்டும். நாம் பேசும் தகவல் வெளியே தெரியக்கூடாது. தெரிந்தால் இருவரின் எதிர்காலம் பாழாகிவிடும்.இந்த உரையாடல், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனால், காங்கிரஸ் வட்டாரங்கள் கவலையில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement