உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்கா இருவரும் Vogue பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.
பிப்ரவரி 24, 2022 அன்று புடினின் ரஷ்ய படை உக்ரைனுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதலை தொடங்கியதிலிருந்து, ஜூலை 15-ஆம் திகதிக்குள் குறைந்தது 5,237 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 358 பேர் குழந்தைகள்.
ஜூன் 11-ஆம் திகதி தரவுகளின்படி, குறைந்து 10,000 உக்ரைனிய இராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 19-ஆம் திகதிக்குள் 9.6 மில்லியன் (96 லட்சம்) மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு நாட்டின் வேறு பகுதிகளுக்கோ, வேறு நாடுகளுக்கோ இடம்பெயர்ந்துள்ளனர்.
Image: Vogue
ஜூலை 15-ஆம் திகதி நிலவரப்படி, 36.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உள்கட்டமைப்பி சேதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்கா இருவரும் Vogue பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு புகைப்படம் எடுப்பதற்கு நேரம் ஒதுக்கினர்.
Image: Vogue
இந்த ஜோடியின் புகைப்படம் Vogue பத்திரிகையின் ஆகஸ்ட் பதிப்பின் டிஜிட்டல் அட்டையில் இடம்பெற்றது. மேலும், புகைப்படக்கலைஞர் அன்னி லீபோவிட்ஸ் தம்பதியினரை பல புகைப்படங்களை எடுத்துள்ளார். அவை voguemagazine-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.
உக்ரேனிய ஜனாதிபதி சமீபத்தில் எப்போதும் அணியக்கூடிய ஆலிவ் பச்சை நிற கெட்அப்பில் தனது மனைவியை கட்டித்தழுவுவதையும், மற்றொரு புகைப்படத்தில் மேஜையின் குறுக்கே கைகளை பிடித்திருப்பதையும் காணலாம்.
Image: Vogue
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் சலசலப்பை உருவாக்கியுள்ளது, பல பயனர்கள் டிஜிட்டல் அட்டையை “அழகான” மற்றும் “சக்திவாய்ந்த படம்” என்று அழைத்தனர். ஆனால் மற்றவர்கள், தங்கள் நாடு போரால் அழிக்கப்படம் நேரத்தில் ஒரு பத்திரிகைக்கு போஸ் கொடுத்ததற்காக இந்த ஜோடியை விமர்சித்து வருகின்றனர்.
Image: Vogue
தகவல்களின்படி, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஓலேனா ஜெலென்ஸ்கா இருவரும் Vogue பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளனர். அவர்களது பேட்டியானது Vogue-ன் ஆகஸ்ட் மாத பதிப்பில் வெளியாகின்றன.
Image: Vogue