இந்தியாவில் அனைத்து துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் சேவை தரம் மாறி வரும் இந்த இண்டர்நெட் உலகில் DTH துறை தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.
சமீபத்தில் டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் வெளியிட்ட PIR அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் தனியார் DTH நிறுவனங்கள் சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச் காலாண்டில் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்த DTH வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 68.52 மில்லியனில் இருந்து 66.92 மில்லியனாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் 4 DTH நிறுவனங்களிடம் தற்போது 69.57 மில்லியன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.
DTH நிறுவனங்கள்
4 DTH நிறுவனங்களின் வர்த்தகச் சந்தையின் ஆதிக்கத்தைப் பார்க்கும் போது டாடா குழுமத்தின் டாடா ப்ளே தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய DTH சந்தையில் டாடா ப்ளே மட்டும் சுமார் 33.23 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 33.48 சதவீதமாக இருந்தது.
டாடா ப்ளே
டாடா ப்ளே நிறுவனத்தைத் தொடர்ந்து பார்தி டெலிமீடியா நிறுவனம் அதாவது ஏர்டெல் DTH நிறுவனம் 26.24 சதவீத சந்தையும், டிஷ் டிவி நிறுவனம் 22.10 சதவீத சந்தையும், சன் டைரெக்ட் 18.43 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது. மார்ச் காலாண்டில் சன் டைரெக்ட் மற்றும் டிஷ் டிவி மட்டுமே கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
கேபிள் டிவி துறை
இதேபோல் கேபிள் டிவி துறையில் மாரச் 31 ஆம் தேதி முடிவில் 1764 பதிவு செய்யப்பட்ட MSO உள்ளனர், ஆனால் 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது வெறும் 12 MSO-க்களும், 1 HITS ஆப்ரேட்டர்களும் தான்.
முக்கியக் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்
மேலும் டாப் ஆப்ரேட்டகளின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4.58 கோடியில் இருந்து 4.59 கோடியாக அதிகரித்துள்ளது. GTPL ஹேத்வே, கேரளா கம்யூனிகேஷன்ஸ் கேபிள் லிமிடெட், NXT டிஜிட்டல் ஆகியவை முன்னணி நிறுவனமாகவும், மார்ச் காலாண்டில் கூடுதலாக வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனமாகவும் உள்ளது.
IPTV ஆப்ரேட்டர்கள்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), 31.03.2022 நிலவரப்படி 20 IPTV ஆப்ரேட்டர்கள் உள்ளனர். தற்போது, ஆந்திரப் பிரதேச மாநில ஃபைபர்நெட் லிமிடெட் மார்ச் 2022 இறுதியில் 7,50,306 வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.
சாட்டிலைட் டிவி சேனல்கள்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) அனுமதித்துள்ள தனியார் சாட்டிலைட் டிவி சேனல்களின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் 893 இல் இருந்து 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 885 ஆகக் குறைந்துள்ளது.
கட்டணச் சேனல்களின் மொத்த எண்ணிக்கை 543ல் இருந்து 540 ஆகக் குறைந்துள்ளது, அதே சமயம் ப்ரீ-டு ஏர் (FTA) சேனல்களின் எண்ணிக்கை 350ல் இருந்து 345 ஆகக் குறைந்துள்ளது.
FM ரேடியோ சேவைகள்
ஆல் இந்தியா ரேடியோ (AIR) மூலம் இயக்கப்படும் ரேடியோ சேனல்களைத் தவிர, FM ரேடியோ ஆபரேட்டர்கள் TRAI க்கு தெரிவித்த தரவுகளின்படி 31 மார்ச் 2022 முடிவில், 113 நகரங்களில் 386 தனியார் FM ரேடியோ சேனல்கள் 36 தனியார் FM ரேடியோ ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன.
TRAI: User base and operators of DTH, Cable TV, FM Radio, Satellite TV, IPTV
TRAI: User base and operators of DTH, Cable TV, FM Radio, Satellite TV, IPTV டாடா ஆதிக்கம், ஆனா சன் டைரக்ட் மாஸ்.. எப்படித் தெரியுமா..?!!