.பெங்களூரு : ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தோரிடம், தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு பிரிவு அதிகாரிகள், நான்கு ஆண்டுகளில் 82 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேக்கு வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தென்மேற்கு ரயில்வேயில், பெங்களூரு, ஹுப்பள்ளி, மைசூரு என மூன்று மண்டலங்கள் உள்ளன. இதில் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
இதில், டிக்கெட் இன்றி பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் ரயில்வேக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.இதை தடுக்க, ரயில்வே அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். டிக்கெட் பரிசோதகர்கள், தென்மேற்கு ரயில்வே கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகின்றனர்.இவர்கள், டிக்கெட் இன்றி பயணம் செய்வோர், பெட்டி மாறி பயணிப்போர் போன்றோரிடம் அபராதம் வசூலிக்கின்றனர். பொது பெட்டிக்கு டிக்கெட் எடுத்து, படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்போருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
10 லட்சம் பேர்இந்த வகையில், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் பெங்களூரு பிரிவில் மட்டும் நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் பேர் டிக்கெட் இன்றி பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2019ல் 28 கோடி ரூபாய்; 2020ல் 30.56; 2021ல் 4 கோடி; 2022ல், இதுவரை 19.69 கோடி என மொத்தம் 82 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் மாநில அளவில் அதிக அபராதம் வசூலிக்கப்பட்ட மண்டலமாக, பெங்களூரு பிரிவு சாதனை படைத்துள்ளது. அபராதம் வசூலிப்பதுடன் பயணியரிடம் டிக்கெட் இன்றி பயணிப்பது சட்டப்படி குற்றம் என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
அதிக அபராதம் வசூலித்த ஊழியரான பாரதி என்பவருக்கு, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் விருது கிடைத்துள்ளது.* சிறப்பான சேவைஇது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தென் மேற்கு ரயில்வேயில், பெங்களூரு மண்டலம் வருவாய் இழப்பை தடுப்பதில் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளது. டிக்கெட் இன்றி பயணிப்போரை கண்டுபிடித்து, அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.’இதன் மூலம் மிகச்சிறப்பான சேவையை செய்துள்ளது. அதோடு பயணியருக்கும் தரமான சேவைகள் வழங்கப்படுகின்றன,’ என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement