எலஹங்கா : பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், எலஹங்காவில் நடத்திய மக்கள் குறைதீர் முகாமில் அப்பகுதியினர் அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தனர்.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், மண்டல அலுவலகங்களுக்கு சென்று மக்கள் குறை தீர் முகாம் நடத்தி வருகிறார். இந்த வகையில், நேற்று எலஹங்கா மண்டல அலுவலகத்தில் குறை தீர் முகாம் நடத்தினார். நேற்று மதியம் 2:00 மணியில் இருந்து, 5:00 மணி வரை முகாம் நடந்தது.அப்போது, கமிஷனர் – புகார்தாரர் இடையே நடந்த கலந்துரையாடல்:புகார்தாரர் 1: காபி போர்டு லே – அவுட்டில் நடைபாதையை, வியாபாரிகள் ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.
இதனால் நடப்பதற்கு சிரமமாக உள்ளது. கமிஷனர்: இரவுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நெருக்கடி இல்லாத பகுதியில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.புகார்தாரர் 2: காபி போர்டு லே – அவுட்டில், மழை நீர் கால்வாய் துார்வாரப்படவில்லை.கமிஷனர்: சுலபமாக தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் துார்வாரப்படும்.புகார்தாரர் 3: காபி போர்டு லே – அவுட்டின் பூங்காவில் இருக்கைகள் பாழாகியுள்ளன. பூங்காவை சரியாக நிர்வகிப்பதில்லை.கமிஷனர்: பூங்கா நிர்வகிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாழாகியுள்ள இருக்கைகள் சரி செய்யப்படும்.புகார்தாரர் 4: 60 அடி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.கமிஷனர்: போக்குவரத்து போலீசார் உதவியுடன், 60 அடி சாலை ஆய்வு செய்யப்படும். ஒரு வாரத்திற்குள் வேகத்தடை அமைக்கப்படும்.புகார்தாரர் 5: தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. பலமுறை சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.கமிஷனர்: கால்நடை பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து, தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவர்.புகார்தாரர் ௬: கெம்பேகவுடா வார்டில், பழைய மண் சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்து சேதமடைந்துள்ளது.
மாநகராட்சி தரப்பில் உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.கமிஷனர்: தனி வீடு திட்டத்தின் கீழ், நிவாரண நிதி வழங்கப்படும்.புகார்தாரர் 7: சம்பிகேஹள்ளியில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. இரவு நேரத்தில் நடமாடுவதற்கு கஷ்டமாக உள்ளது.கமிஷனர்: எரியாத விளக்குகளை கண்டறிந்து, உடனடியாக மாற்றப்படும்.புகார்தாரர் 8: ஜக்கூர் மேம்பாலம் மற்றும் ரயில்வே சுரங்க பாதை அருகில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை, பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.கமிஷனர்:
சுரங்க நடை பாதையில் மழை நீர் நிற்பதால், அதை சரி செய்து பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.புகார்தாரர் 9: ஜக்கூர் பகுதியில் சாலை பள்ளங்கள் மூடப்படவில்லை. அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.கமிஷனர்: ஒரு வாரத்தில் அனைத்து சாலை பள்ளங்களும் மூடப்படும்.புகார்தாரர் 10: அட்டூர் வார்டு, தொட்ட பெட்டஹள்ளியில் ஆரம்ப சுகாதார மையம் இன்றி கஷ்டப்படுகிறோம்.கமிஷனர்: உடனடியாக நம்ம கிளினிக் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கலந்துரையாடல் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement