சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.