எங்கள் காதல் இன்னும் அதிகமாகியுள்ளது! உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறித்து மனைவி உருக்கம்


உக்ரைன் போர் காரணமாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள பிரிவு குறித்து தம்பதி மனம் திறந்துள்ளனர்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர் தொடங்கியதில் இருந்து ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர்.

இந்த நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெலன்ஸ்கி கூறுகையில், என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவு கடந்து நேசிக்கிறார்.

எங்கள் காதல் இன்னும் அதிகமாகியுள்ளது! உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறித்து மனைவி உருக்கம் | Zelensky And Wife Love Relationship Stronger

Annie Leibovitz/Vogue

எனக்கு ஒரே குடும்பம், ஒரே காதல், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போரினால் ஏற்பட்ட பிளவை நாங்கள் சமாளிக்கிறோம். இது எங்களுக்குள் இருக்கும் அன்பை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது. இன்னும் நாங்கள் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறோம் என கூறினார்.

அவர் மனைவி ஒலினா ஜெலன்ஸ்கா கூறுகையில், என்னுடைய கணவர் தன் குழந்தைகளை இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாமல் தவிக்கிறார்.

எங்களுடைய உணர்ச்சிகளை நாங்கள் எவ்வாறு சமாளிக்கிறோம் என்பதே தெரியவில்லை.

போர் தொடங்கியதில் இருந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரால் வீட்டிற்கு வந்த குழந்தைகளை பார்க்க நேரமில்லை.இது எங்களுக்கு கடினமான நேரம் என கூறியுள்ளார்.

எங்கள் காதல் இன்னும் அதிகமாகியுள்ளது! உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குறித்து மனைவி உருக்கம் | Zelensky And Wife Love Relationship Stronger

file photo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.