Paytm Mall Cyber Attack: பேடிஎம் மால் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேடிஎம் மால் மீதான இந்த சைபர் தாக்குதலில், 34 லட்சத்துக்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் (Data Breach) கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சைபர் தாக்குதல் 2020ஆம் நடைபெற்றது. அதன்பின், அது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய ஹேக்கிங் தகவலை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. Paytm வெளியிட்டுள்ள அறிக்கையில் பயனர்களின் தரவு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது.
மேலதிக செய்தி:
Google Street View: இந்த 10 நகரங்களுக்கு மட்டும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி கிடைக்கும்!
Have I Been Pwned என்ற இணையதளம் வாயிலாக உங்கள் தரவுகள் கசிந்ததா என்பதை தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளம் தனிநபரின் தகவல் கசிவு குறித்து விவரமாக அலசுகிறது. கசிந்த தனியுரிமை தகவல்களில் தேடும் நபரின் தகவல்கள் இருக்கிறதா என்பதையும் இந்த இணையதளம் காட்டும்.
Firefox Monitor ஒரு இணைப்பையும் வெளியிட்டுள்ளது. இதில் பேடிஎம் மாலின் டேட்டா கசிவு குறித்த தகவல்களை பயனர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Paytm Mall தரவு கசிவில் தங்கள் தரவு சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்த தளத்தில் இருந்து பயனர்கள் சரிபார்க்கலாம்.
மேலதிக செய்தி:
வெறும் ரூ.3,295 செலுத்தி iPhone 13 வாங்கலாம் – ஐபோன் 14 வருகையை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு!
தரவு கசிவு பயனர்களின் மின்னஞ்சல் ஐடியிலிருந்து தொலைபேசி எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி, சொத்து நிலை மற்றும் கடைசி ஷாப்பிங் தேதி வரையிலான தகவல்களை உள்ளடக்கியது. இந்த கசிவு குறித்து ட்ராய் ஹன்ட் ட்வீட் செய்துள்ளது.
Paytm Mall ஹேக்கில் உங்கள் தரவு சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்
பேடிஎம் மால் 3.4 லட்சம் டேட்டா கசிவில் உங்கள் தரவு சம்பந்தப்பட்டதா என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பயர்பாக்ஸ் மானிட்டரில் https://haveibeenpwned.com/ க்குச் சென்று தேடலாம். மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு சரிபார்க்கலாம். சைபர் பாதுகாப்பு நிறுவனமான Cyble, 2020ஆம் ஆண்டில் இந்த தரவு கசிவை உறுதிப்படுத்தியது.
மேலதிக செய்தி:
5G Auction: வேற யாருக்கும் இந்த தைரியம் வரல; உயர்தர சேவை வழங்க 700 Mhz Band-இல் கைவைக்கும் ஜியோ!
அந்த சமயத்தில் ஹேக்கர் தரவுகளுக்கு ஈடாக 10 ETH (Ethereum) கிரிப்டோகரன்சி கோரினார். அப்போது அதன் விலை ரூ.3.12 லட்சம் (இப்போது ரூ.12.3 லட்சம்) கோரினார் என்று அறிக்கை கூறுகிறது. ஜூலை 27 அன்று இந்தியாவில் Ethereum விலை சுமார் ரூ.1,23,000ஆக இருந்தது.