Chinese Rocket Long March 5B: புதிதாக ஏவப்பட்ட பெரிய சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் இந்த வார இறுதியில் வளிமண்டலத்தில் மீண்டும் ஒரு கட்டுப்பாடற்ற மறு நுழைவு மூலம் பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தாங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால் தரையில் வாழும் உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை என்றும் அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
5G Auction: 1800 MHz அலைக்கற்றைக்கு கடும் போட்டி; விலையை சற்று உயர்த்திப்பிடித்த அரசு!
வெடித்து சிதறிய ராக்கெட்
லாங் மார்ச் 5பி (Long March 5B) ராக்கெட் ஜூலை 24 அன்று விண்வெளியில் வெடித்து சிதறியது. சீன விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருள்களை லாங் மார்ச் 5பி எடுத்துச் சென்றது. சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு லாங் மார்க் 5பி முதன்முதலாக ஏவப்பட்டது.
தற்போது வெடித்தது மூன்றாவது ராக்கெட் ஆகும். இது 100 அடி நீளமும், 2200 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது. புவியின் கீழ்மட்ட பாதையில் இருக்கும் ராக்கெட், புவி ஈர்ப்பு விசையால் விரைவில் பூமிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமிக்கு திரும்பும் ராக்கெட் குப்பைகள்
PC: Space
இது எந்த இடத்தில் விழும் என்ற தகவலை உறுதியாக சொல்ல முடியவில்லை என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்து வரும் நாள்களில் இது எங்கு விழ வாய்ப்பிருக்கும் என்பது குறித்து கணிக்க முடியும் அல்லது அந்த பரப்பளவை உறுதிசெய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய லாப நோக்கமற்ற ஆராய்ச்சி மையமான ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) 0024 GMT அல்லது மைனஸ் 16 மணிநேரத்தில் மறு நுழைவு நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Google Street View: இனி உங்க வாழ்க்கைய ரொம்ப நிம்மதியா வாழலாம் – கூகுள் உங்களுக்கு வழிகாட்டும்!
மனிதர்களுக்கு பாதிப்பு உண்டா?
குப்பை விழும் பூமியின் மேற்பரப்பில் 75 விழுக்காடு நீர், பாலைவனம் அல்லது காடுகளாக இருப்பதால், பூமியில் உள்ள மக்களுக்கும் சொத்துக்களுக்கும் ஆபத்து மிகவும் குறைவு என்று விண்வெளி ஆய்வாளர் டெட் முயல்ஹாப்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும்கூட, ராக்கெட்டின் துண்டுகள் மக்கள்தொகை நிறைந்த பகுதியில் விழுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மே 2020 இல் மற்றொரு சீன லாங் மார்ச் 5B இன் துண்டுகள் ஐவரி கோஸ்ட்டில் தரையிறங்கியபோது, மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பல கட்டடங்களை சேதப்படுத்தியது. ஆனால், இதில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
மேலதிக செய்தி:
James Webb Space Telescope: பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி – வியாழனின் படங்களை வெளியிட்ட நாசா!
இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, அமெரிக்காவும் பிற விண்வெளிப் பயண நாடுகளும் தங்கள் ராக்கெட்டுகளை வடிவமைக்க கூடுதல் செலவைச் செய்கின்றன.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், குப்பைகள் விமானப் போக்குவரத்துக்கு அல்லது தரையில் உள்ள மக்கள் அல்லது சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும், ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் மீண்டும் பூமிக்குள் நுழையும் போது அழிக்கப்படும் என்றார்.