செஸ் ஒலிம்பியாட் 2022.. மாமல்லபுர சிறு வணிகர்களுக்கு எப்படி நம்பிக்கை அளிக்கிறது?

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழகத்தில் திருவிழா கோலம் பூண்டுள்ளது எனலாம். குறிப்பாக இதற்காக தமிழக அரசு செய்த ஏற்பாடுகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் , ஒவ்வொரு நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நடைபெறுகிறது.

இது வெறும் விளையாட்டு போட்டியாக மட்டும் அல்ல, இது சர்வதேச அளவில் தமிழகத்தினை கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளை பார்த்து ரசிக்க எவ்வளவு டிக்கெட் கட்டணம் தெரியுமா?

சிறு வணிகம்

சிறு வணிகம்

மாமல்லபுரத்தை உருவாக்குவது அதன் மக்கள் தான். இங்கு கைவினை கலைஞர்கள், சிற்பிகள், மீன்பிடி உணவகங்கள் என பலரும் நம்பிக்கையான காற்றினை சுவாசித்து வருகின்றனர், ஏனெனில் இன்னும் சில வாரங்களுக்கு மாமல்லபுரம் கொஞ்சம் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக வாய்ப்பு

வணிக வாய்ப்பு

உள்நாட்டு மக்கள் மட்டும் அல்ல, வெளிநாட்டு பயணிகளும் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கலாம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தவிர இன்னும் சில முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக the Covelong Point Surf, Music, Yoga Festival, the Tamil Nadu International Kite Festival உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது மாமல்லபுரத்தை சுற்றியுள்ள சிறு வணிகர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்.

செஸ் போர்டுகளாக உள்ள கடைகள்
 

செஸ் போர்டுகளாக உள்ள கடைகள்

மாமல்லபுரத்தினை சுற்றியுள்ள சிறிய கைவினை பொருட்கள் கடைகள் இன்று வரையில் அமைதியாக உள்ளன. எனினும் இனி வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கலாம்.

காட்டன் பீச் உடைகள், அழகிய நினைவு பொருட்கள், பாடும் கிண்ணங்கள் உள்ளிட்ட கடைகளில், இன்று செஸ் போர்டுகள் நிரம்பி வழிகின்றன.

வெளி நாட்டு சுற்றுலா பயணிகள்

வெளி நாட்டு சுற்றுலா பயணிகள்

இதற்காகத் தான் கடந்த சில வாரங்களாக சிறு வணிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் நாங்கள் சுற்றுலா பயணிகளை பெறுவோம். கொரோனாவில் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். கொரோனாவுக்கு முன்பாக சுற்றுலா பயணிகளை பெற்றோம். அதன் பிறகு முழுமையான பயணிகளை பெறவில்லை. சர்வதேச வீரர்கள் விளையாடுவதோடு மட்டும் அல்ல, கடைகளை, மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வருவார்கள் என மாமமல்லபுரத்தினை சுற்றியுள்ள சிறு வணிகர்கள் நம்புகின்றனர்.

மோடி - ஜின்பிங் சந்திப்பு

மோடி – ஜின்பிங் சந்திப்பு

மொத்தத்தில் ஒலிம்பியாட் சிறு வணிகர்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் முதல் அதன் தாக்கம் இருக்கலாம். இது ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஒரு காலமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்த நிலையில், அடுத்த மாதங்களில் வட இந்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல தற்போதும் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How does Chess Olympiad 2022 give hope to small businesses in Mamallapuram?

How does Chess Olympiad 2022 give hope to small businesses in Mamallapuram?/செஸ் ஒலிம்பியாட் 2022.. மாமல்லபுர சிறு வணிகங்களுக்கு எப்படி நம்பிக்கை அளிக்கிறது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.