ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா மந்தனா
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் புரமோஷன் சென்னையில் நடந்தபோது அதில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து தெலுங்கில் தான் நடித்த புஷ்பா, சீதா ராமம் போன்ற படங்களின் புரமோஷன் சென்னையில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சோசியல் மீடியாவில் தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்ற போது எதற்காக கலந்து கொள்ளவில்லை? என்று ஒரு ரசிகர் அவரிடம் கேட்டபோது, பல கமிட்மெண்டுகள் இருந்த காரணத்தால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன். ஆனால் இப்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருவதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என என்னை சென்னையில் நடக்கும் எனது படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்கப் போகிறீர்கள். நான் சொல்வதை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.