கனடாவில் நடப்பு ஆண்டில் மிகப்பெரிய அளவிலான ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளதால், கனடாவில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறையை சமாளிக்க கனடாவில் அதிக புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து அந்த நாட்டு குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தனது ட்விட்டர் பக்கத்திலும் ட்வீட் செய்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் 2022.. மாமல்லபுர சிறு வணிகர்களுக்கு எப்படி நம்பிக்கை அளிக்கிறது?
அதிக தேவையுண்டு
திறமையான தொழிலாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால் இங்கு பற்றாக்குறை உள்ளது. ஆக புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது இன்றியமைததாக மாறியுள்ளது.
இந்த தசாப்த்தத்தின் முடிவில் ஐந்து மில்லியன் கனேடியர்கள் ஓய்வுபெற உள்ளனர். குடியேறத்திற்கான பொருளாதாரத் தேவை முன்னெப்பதையும் விட முக்கியமாகது என கூறியுள்ளார்.
வரவேற்பு
ஆக எங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான புலம்பெயர்கள் தொழிலாளர்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
இலக்கு
எக்ஸ்பிரஸ் என்ட்ரியின் படி, இந்த ஆண்டு 4,31,645 புலம்பெயர் தொழிலாளர்களை வரவேற்க கனடா தயாராக உள்ளது. அடுத்த ஆண்டில் 4,47,055 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா இலக்காக கொண்டுள்ளது. இதே 2024ல் 451000 பேராகவும் இலக்கு வைத்துள்ளது.
டாப் 10 நகரங்கள்
கனடாவில் அதிகளவில் வேலை தேடும் நகரங்களில் எக்ஸ்பிரஸ் என்ட்ரியின் கீழ், பிரான்ட்ஃபோர்ட், ஓட்டாவா, கெலோனா, கியூபெக், கல்கரி, சாஸ்கடூன், அபோட்ஸ்ஃபோர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் டொராண்டோ ஆகியவையும் அடங்கும்.
அதிக வேலை வாய்ப்புகள்
பிரான்ட்ஃபோர்ட் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த ஆண்டில் 17.3% அதிகரித்தும், ஓட்டாவாவில் 67% அதிகரித்தும் உள்ளது. குறிப்பாக தொழில்துறை, மின் மற்றும் கட்டுமான வர்த்தகம், பராமரிப்பு மற்றும் உபகரண செயல்பாட்டு வர்த்தகம், இயற்கை வளங்களில் தொழில் நுட்ப வேலைகள், விவசாயம் மற்றும் உற்பத்தில், பயன்பாட்டு மேற்பார்வையாளர்கள், மத்திய கட்டுப்பாட்டு ஆபரேட்டர்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களை கொண்டுள்ளன.
இந்தியர்களுக்கு வாய்ப்பு
இது வெளி நாடுகளில் வேலை தேடுவோருக்கு மிக நல்ல வாய்ப்பாக அமையலாம். குறிப்பாக அதிகளவில் வெளி நாடுகளில் வேலை செல்லும் இந்திய புலம்பெயர் தொழிலாளார்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
These 10 cities in Canada have more job opportunities for migrant workers?
These 10 cities in Canada have more job opportunities for migrant workers?/கொட்டிக் கிடக்கும் வேலை.. சிவப்பு கம்பளம் விரிக்கும் கனடா.. நிச்சயம் நல்ல சான்ஸ் தான்!