வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அதிமுக பொதுக்குழு வழக்குகளை உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பவும், வழக்குகளை 3 வாரத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. அப்போது ‛அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளன? கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ‛அதிமுக.,வின் அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்தனர். அடிப்படை விதிகளை மீறி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 11ம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. மேலும்
அப்போது நீதிபதிகள், ‛மீண்டும் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதா? இரு தரப்பும் சமரசம் செய்துக்கொள்ள வாய்ப்புள்ளதா?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு இருவர் தரப்பும், ‛வாய்ப்பில்லை’ என பதிலளித்தனர்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர். மேலும், ‛அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே விசாரணைக்காக திரும்ப அனுப்புகிறோம், இந்த விவகாரத்தில் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடுகிறோம்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement