சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.