தாய்லாந்து முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள வகையில் நன்னீர் மற்றும் இறால் வளர்ப்பு விடயங்களை மேம்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தாயலாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் போஜ் ஹெர்பல் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்
இடையில் இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு செயற்திட்டங்களை மேலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்னெடுப்பதற்கான இருதரப்பு கலந்துரையாடலாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.