கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்ற லாரியை பிடித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சோதனை செய்ததில் அரசு விதிமுறைகளை மீறி மாடுகளை ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து 55 எருமை மாடுகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அரசு விதிமுறைகளை மீறி மாடுகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM