தெலுங்கானாவில் கிரேன் கம்பி அறுந்து விழுந்து 5 பேர் பலி| Dinamalar

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள நாகர்னூல் மாவட்டத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் நாகர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூலை 28) இரவு வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து கொல்லப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ரெட்டி கூறுகையில், ‛100 மீட்டர் ஆழத்தில் காயங்களுடன் கிடந்தவர்களை உடனடியாக உஸ்மானியா மருத்துவமனை கொண்டு செல்லபட்டனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.