ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டு இருக்கும் சுற்றறிக்கையில், ”நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியின் தரத்தினை கிடங்குகளில் சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படுவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: தமிழகத்திலும் குரங்கம்மை பாதிப்பா? ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்… அமைச்சர் விளக்கம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM