வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என்றும், இந்த முறை கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் சுமார் 50 சதவிகிததினர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தற்போது பார்ப்போம்.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதலிடம்… அமுலை மீண்டும் முந்திய பார்லே

வருமானவரி தாக்கல்
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) முந்தைய நிதியாண்டிற்கான (FY22) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 என நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு காலக்கெடுவை நீட்டிக்க அரசு மறுத்துவிட்ட நிலையில் ஐடிஆர் இணையதளத்தின் தரவுகளின்படி, இதுவரை 30 மில்லியன் ஐடிஆர்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அபராதம்
ஜூலை 31ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயம் என்றும், அவ்வாறு செய்ய தவறினால் அபராதம், தாமத கட்டணம் மற்றும் மோசமாக நடந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை உள்பட பல விளைவுகள் உள்ளன. இந்த நிலையில் ஜூலை 31க்கு முன் ஐடிஆர் தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்? என்பதை பார்ப்போம்.

தாமதமான கட்டணம்
2022ஆம் ஆண்டு ஜூலை 31 வரையிலான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டாலும், ஆவணத்தை 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்கான தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் ரூ.5,000 ஆக இருக்கும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமதக் கட்டணம் ரூ.1,000 இருக்கும்.

செலுத்தப்படாத வரி மீதான வட்டி
2022ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்கு றகு செலுத்தப்படாத வருமான வரி இருந்தால், நிலுவைத் தொகைக்கு 1 சதவீத வட்டி விதிக்கப்படும். வரி செலுத்துவோர் ஜூலை 31 முதல் நிலுவையில் உள்ள வரியை வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன், நிலுவையில் உள்ள வரியை ஏதேனும் ஒரு மாதத்தின் 5ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு செலுத்தினால், முழு மாதத்தின் வட்டியையும் செலுத்த வேண்டும்.

இழப்புகள்
வரி செலுத்துவோர் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்புகள் அல்லது பிற வருமானங்களுக்கு எதிராக சொத்து விற்பதன் மூலம் தங்கள் பொறுப்பைக் குறைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இழப்புகளை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த அனுமதி எல்லாம் நீங்கள் ஜூலை 31க்குள் வருமானவரி செலுத்தியிருந்தால் மட்டுமே சாத்தியம். ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்தால் இழப்புகளை எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

சிறை
வருமானவரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் வரிசெலுத்தும் தொகையில் 50 சதவீதம் அபராதமாகவும், மோசமான நடந்தால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஐடிஆர் தாக்கல் செய்ய தவறினால், டிடிஎஸ் பிடித்தத்திலிருந்து எந்தத் தொகையையும் ரீபண்ட் பெற முடியாது.

பரிவர்த்தனைகள்
கடந்த நிதியாண்டில் அதாவது 2020-21ல் உங்கள் வீட்டைப் புதுப்பித்திருந்தால், அது பற்றிய விவரங்களை ஐடிஆரில் உள்ள ‘மூலதன ஆதாயங்கள்’ என்ற பகுதியில் குறிப்பிட வேண்டும். அதேபோல் ஏப்ரல் 1, 2021 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் நீங்கள் ஏதாவது சொத்தை விற்பனை செய்திருந்தால் அதன் விவரங்கள் ‘மூலதன ஆதாயங்கள்’ என்ற பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும்.

வெளிநாட்டில் உள்ள சொத்து
வெளிநாட்டில் உங்களுக்கு சொந்தமாக வீடு இருந்தால், அதன் விவரங்களையும் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் உங்களுக்கு வருமானம் இருந்தாலும் அதுகுறித்த விவரங்களையும் வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம்.

வருங்கால வைப்பு நிதி (பிஎஃப் கணக்கு)
நீங்கள் பிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வட்டி சம்பாதித்தால், அதை ஐடிஆரில் குறிப்பிட வேண்டும்.
What happens if you Failing filing an ITR within July 31?
What happens if you Failing filing an ITR within July 31? | இன்னும் இரண்டே நாள் தான்.. ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் சிறை தண்டனையா?