உலகளவில் மிக அதிகமாக இந்தியாவில் 40 சதவீதம் டிஜிட்டல் பரிவர்த்தனை: பிரதமர் மோடி பெருமிதம்

அகமதாபாத்: ‘உலகின் 40 சதவீத டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் இந்தியாவின் முதல் சர்வதேச தங்க சந்தை மற்றும்  சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தன்னம்பிக்கையின்றி, அடிமைத் தனத்தால் முடங்கி கிடந்தது. தற்போது, நிலைமை மாறி வருகிறது. சர்வதேச சந்தைகளுடன் நாம் போட்டி போட்டு வருகிறோம். சர்வதேச நிதித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற  நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னேறி உள்ளது. இந்த சாதனைக்காக மக்களை பாராட்டுகிறேன். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. உலகளவில் நடக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியாவில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் முடக்கங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்திலும் கூட கிப்ட் சிட்டியின் மூலம் குஜராத் மாநிலம், நிதி தொழில்நுட்ப துறையில் பெரிய சாதனைகளை படைத்தது,’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.