அமெரிக்காவில் மாப்பிள்ளை… குமரியில் மணப்பெண்… வீடியோ கான்ஃபரன்ஸ் திருமணத்திற்கு ஐகோர்ட் அனுமதி!

Madurai High Court Tamil News: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வம்சி சுதர்ஷினி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தியாவைச் சேர்ந்த ராகுல் எல் மது, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள். நாங்கள் இங்குள்ள சிறப்பு திருமணச்சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம்.

இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தோம். பின்னர் நாங்கள் இருவரும் திருமண பதிவு அதிகாரி முன்பு நேரில் ஆஜரானோம்.

ஆனால், எங்கள் திருமண விண்ணப்பத்தின்பேரில் முடிவு எடுக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, நாங்கள் இருவரும் காத்திருந்தோம். 30 நாட்கள் முடிந்த பின்பும், எங்கள் திருமண விண்ணப்பத்தின் மீது சார்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே எனது வருங்கால கணவர் ராகுல், இங்கு தங்குவதற்கு அவகாசம் இல்லாமல் போனது. அவரது விடுமுறையை நீட்டிக்க வழியில்லை. இதனால் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆனால் திருமண பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சார்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார்.

எனவே, நாங்கள் இருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின்மூலம் பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்ககு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எனவே, அவர்களின் திருமணத்தை வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. 3 சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும், ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவு சான்றிதழை மணவளக்குறிச்சி சார்பதிவாளர் வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.