அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ₹1829 கோடி மதிப்பு ஒப்பந்தங்களில் முறைகேடு! பொறியாளர் பழனி பணியிடை நீக்கம்!

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் ரூ.1829 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு,  கண்காணிப்பு பொறியாளராக இருந்த பழனியை பணியிடை நீக்கம் செய்து துறை செயலர் உத்தரவிட்டு உள்ளர். பழனி கடந்த அதிமுக ஆட்சியின்போன் ஆட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருந் RR இன்பிரா, KCP என்ஜினியர்ஸ், JSV இன்பிரா ஒப்ந்த நிறுவனக்களுக்கு சாதகமாக செயல்பட்டதாககுற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில், 18 மாதங்களுக்கு முன்பு அறப்போர் வெளிப்படுத்திய நெடுஞ்சாலைத்துறை டெண்டர் செட்டிங். இதை தடுக்க வேண்டிய கண்காணிப்பு பொறியாளர் பழனி செட்டிங் செய்ய துணை போனதால் அரசுக்கு 700 கோடி இழப்பு. செட்டிங் கொள்ளையர்களுக்கு 700 கோடி லாபம். இந்த செட்டிங் குறித்து தொடர்ந்து அறப்போர் அளித்த புகார்களை உதாசீனப்படுத்திய அன்றைய முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த கொள்ளையில் பங்கு உண்டா? திமுக அரசு வழக்கு பதிந்து விசாரிப்பார்களா? என கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த நிலையில், தற்போது கண்காணிப்பு பொறியாளராக இருந்த பழனியை பணியிடை நீக்கம் செய்து துறை செயலர் உத்தரவிட்டு உள்ளர்.

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறப்போர் இயக்கம் பல முறை புகார்கள் கொடுத்து தடுத்தும் அதை எல்லாம் மீறி தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறையில் செய்யப்பட்ட டெண்டர் செட்டிங் புகாரில் அன்று அங்கு கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய பழனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அடுத்த கட்டமாக அவர் மீது FIR போடப்பட்டு கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த 692 கோடி செட்டிங் புகாரில் அன்றைய முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பங்கு என்ன என்று விசாரணை நடத்தப்பட வேண்டும். அது வரை அறப்போர் கேள்விகள் தொடரும்..! என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.