BSNL Vs Jio Long Validity Plans: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. நிறுவனங்கள் 15 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் பல சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன.
நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவில் இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, 336 நாள்கள் வேலிடிட்டியுடன் வரும் மிகவும் மலிவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் இந்த திட்டம் டேட்டா, அழைப்பு, எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், ஜியோவின் இந்த திட்டத்துக்கு மாற்றாக அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ஒரு குறைந்த விலை திட்டத்தைக் கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் குறைந்த விலையில் பயனர்களுக்கு ஜியோவின் அதே நன்மைகளை வழங்குகிறது. இந்த இரு பிரீப்பெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ.1,559 ரீசார்ஜ் திட்டம் (jio 1559 plan details)
இது ஜியோவின் சிறந்த திட்டமாகும். இது குறைந்த விலையில் நீண்ட நாள் செல்லுபடியாகும். நிறுவனத்தின் ரூ.1,559 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 336 நாள்களாகும். இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இதில் கிடைக்கும் டேட்டாவுக்கு தினசரி வரம்பு இல்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் 24ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்தத் தரவு முடிந்ததும், நீங்கள் 64 kbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
இது தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், 3600 எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவீர்கள். இதுமட்டுமில்லாமல் ஜியோவின் சிறந்த செயலிகளுக்கான அணுகலும் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.1,499 ரீசார்ஜ் திட்டம் (bsnl 1499 plan details 2022)
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 1,499 ரூபாய்க்கு ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த குறைந்த விலை திட்டம் ஜியோவின் ரூ.1,599 ரீசார்ஜ் திட்டத்துடன் வலுவாக போட்டியிடுகிறது.
இந்த BSNL திட்டத்தில், நீங்கள் 336 நாள்களுக்கு மொத்தம் 24GB டேட்டாவைப் பெறுவீர்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 SMS இந்த திட்டத்தின் வாயிலாக நீங்கள் அனுபவிக்கலாம்.