5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்… 4வது நாளில் நடந்தது என்ன?

இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏற்கனவே மூன்று நாள் நடந்து விட்ட நிலையில் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் நான்காவது நாள் முடிவில் ரூ.1,49,855 கோடி மதிப்புள்ள ஏலம் முடிவடைந்துள்ளது.

முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடியும் இரண்டாவது நாளில் சுமார் 4 ஆயிரம் கோடியும் மூன்றாவது நாளில் சுமார் 200 கோடி ஏலத்தொகை அரசுக்கு கிடைத்த நிலையில் 4வது நாளில் எவ்வளவு கிடைத்தது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்… இந்த ஒன்றை செய்யவில்லை என்றால்…

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்

இந்தியாவின் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏல விற்பனை நான்காவது நாளான நேற்று வரை ரூ.1,49,855 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. நேற்றைய ரேடியோ அலைகளுக்கான ஏலத்தின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளன. இந்த நிலையில் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 71 சதவீதம் தற்காலிகமாக விற்கப்பட்டுவிட்டதாக தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நேற்றைய ஏலம்

நேற்றைய ஏலம்

நேற்று மட்டும் நடந்த 7 சுற்றுகள் ஏலத்தில் மட்டும் ரூ.231.6 கோடி அரசுக்கு கிடைத்துள்ளது என்பதும், மொத்தம், இதுவரை 23 சுற்று ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஏலத்தொகையையும் சேர்த்து மொத்தம் இதுவரை ரூ.1,49,855 கோடி மதிப்புள்ள ஏலம் முடிவடைந்துள்ளது

4 நிறுவனங்கள்
 

4 நிறுவனங்கள்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் கெளதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் உள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் நாளையும் ஏலத்தில் கலந்து கொள்ள தயாராகியுள்ளன. 5ஜி ஸ்பெக்ட்ரம் முதல் நாளில் ரூ. 1.45 லட்சம் கோடிக்கு ஏலம் போனது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு வட்டத்தில் 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டிற்கான தீவிர ஏலத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பு

ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பு

மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் (ஜிகாஹெர்ட்ஸ்) ரேடியோ அலைகள் குறைந்தபட்சம் ரூ. 4.3 லட்சம் கோடி மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ்), மிட் (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் அதிக அதிர்வெண் (26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைக்கு ஏலம் நடத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fourth Day of 5G auction is Rs 232 crore, 71% of spectrum on sold!

Fourth Day of 5G auction is Rs 232 crore, 71% of spectrum on sold! | 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்… 4வது நாளில் நடந்தது என்ன?

Story first published: Saturday, July 30, 2022, 6:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.