சுதந்திரப் போராட்ட தலைவர்களை நினைவுகூறும் விதமாக தன்னுடைய ரத்தத்தால் அவர்களுடைய உருவபடங்களை வரைந்து பெண் மரியாதை செலுத்தினார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சல புதூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுசீலா. கணவனை இழந்து தனது மகனுடன் வசித்து வரும் இவர், தாரமங்கலம் பகுதியில் வளையல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தேசத் தலைவர்களை போற்றும் விதமாக காந்தி, நேதாஜி, பாரதிதாசன், வ.உ.சிதம்பரம், அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் படங்களை, தன்னுடைய ரத்தத்தினால் வரைந்துள்ளார்.
இதற்காக முறையாக காவல்துறையில் அனுமதி பெற்று அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூலம் தனது உடலில் இருந்து ரத்தம் எடுத்து அந்த ரத்தத்தின் மூலம் தலைவர்களின் உருவப் படத்தை வரைந்து உள்ளதாக சுசீலா தெரிவித்துள்ளார்.
ரத்தம் சிந்தி சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களுக்கு 75-வது சுதந்திர தினத்தில் நன்றி செலுத்தவே தனது ரத்தத்தில் சில துளிகளை பயன்படுத்தியதாக கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM