தென் ஆப்ரிக்கா நாட்டில் மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது எட்டு இளம் மாடல் அழகிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள, ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள, சிறிய நகரமான க்ரூகர்ஸ்டோர்ப்பின் புறநகர் பகுதியில், மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றது. இதில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண் மாடல்களும், பல ஆண்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல், குழுவினரின் உபகரணங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல், அனைவரின் பணத்தையும், உடைமைகளையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தென் ஆப்ரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பாக நடந்த டி20 போட்டி – திடீரென வெடித்த குண்டு.. அலறிய மக்கள்!
இது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் தென் ஆப்ரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.