வங்காளதேசம்: ரெயில் மீது பஸ் மோதி விபத்து – 11 பேர் பலி

டாக்கா,

வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் ரெயில் மீது பஸ் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 15 க்கும் மேற்பட்டவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

மிர்ஷாராய் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீடகப்பட்டு சிட்டகாங் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மிர்ஷாராய் போலீஸ் அதிகாரி கபீர் உசைன் தெரிவிக்கையில், டாக்கா நோக்கி செல்லும் ப்ரோவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. பஸ் மீது ரெயில் மோதி சில மீட்டர் துரத்திற்கு இழுத்து சென்றது. அதில் சிக்கி 7 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பஸ்சில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்துள்ளனர். என அவர் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் மாலைக்குள் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.