30 வருடத்திற்கு முன் இறந்தவர்ளுக்கு ஆத்மா திருமணம்…! மீன் வறுவல், சிக்கன் கிரேவியுடன் விருந்து!

பெங்களூரு

கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆத்மா திருமணத்தை ஒரு சடங்காக பார்த்து அதை பின்பற்றி வருகிறார்கள். தட்சினா கன்னடா மாவட்டத்தில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த ஆத்மா திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற திருமணம் நடத்தப்படுகிறது.

திருமணம் செய்து வைத்து ஆத்மாக்களை மோட்சம் அடைய இந்த சடங்கை பின்பற்றி வருவதுதான் இந்த பிரேத திருமணம் ஆகும். நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ அப்படியேதான் இந்த பிரேத திருமணங்களும் நடைபெறும். இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன், மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கைகளில் மணமகளும் மணமகனும் (அவர்களது ஆடைகளுடன் உறவினர்கள்) 7 முறை சுற்றி வருவது வழக்கம்.

இந்த திருமண விருந்தில் மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. இந்த வீடியோக்களை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

இதனை அன்னி அருண் என்பவர் தவனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.அருண் ஜூலை 28 அன்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாகவும், ஒரு வித்தியாசமான காரணத்திற்காக அதைப் பற்றி எழுதுவதாகவும் கூறி உள்ளார்.’


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.