இளையராஜா இசைப்பள்ளி துவங்க வேண்டும் ; அல்போன்ஸ் புத்ரன் விருப்பம்

நேரம், பிரேமம் என இரண்டு படங்களை இயக்கியதன் மூலமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெற்றவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதேசமயம் பிரேமம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் கூட அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தான், மீண்டும் டைரக்ஷனில் இறங்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் அல்போன்ஸ் புத்ரன் எப்போதுமே தமிழ் சினிமாவில் உள்ள ஜாம்பவான்களை பற்றி தனது வியப்பையும், ஆர்வத்தையும் தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கூறியுள்ள அல்போன்ஸ் புத்ரன், இளையராஜா ஒரு இசைப்பள்ளி துவங்க வேண்டும் என்றும், அதில் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் புரபசர்களாக பணியாற்ற வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமல்ல, இசையமைப்பாளர்கள் கீரவாணி, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், தேவா, அனிருத் போன்றவர்கள் இதில் விசிட்டிங் புரபசர்களாக தங்களது பங்களிப்பை தரவேண்டும் என்றும் எல்லா விதமான இசையையும் இங்கே கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் தனது அதீத விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன் நிச்சயமாக இது ஒரு நாள் நடக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.