இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தற்போது தொடர்ந்து சரிவு பாதையில் இருக்கும் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுத்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.
இதை அடைய முதலில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் உணவு பொருட்கள், எரிபொருள், எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதே தொடர்ந்து இலங்கை நாட்டின் கடனை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்.
இவ்விரண்டும் செய்ய இலங்கைக்கு அதிகப்படியான நிதி தேவை இருக்கும் நிலையில் பல மாதங்களாகத் தொடர்ந்து IMF அமைப்பிடம் நிதி தேவைக்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது ஜூலை மாதம் நுகர்வோர் பணவீக்க தரவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா-வை டார்கெட் செய்கிறதா சீன உளவு கப்பல்..? என்ன நடக்குது..?!
ஜூலை பணவீக்கம்
இலங்கையின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 54.6 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதம் 60.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் புள்ளிவிவர துறை சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு
கொழும்பு நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8 சதவீதமாக இருந்ததாக இலங்கை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உணவு பணவீக்கம்
மேலும் ஜூன் மாதத்தில் 80.1 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 90.9 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் 75 சதவீதமாக உச்சத்தை அடையலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி
இலங்கை 1948ஆம் ஆண்டுக்கு பின்பு மிகவும் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. ஒருபக்கம் அரசு நாட்டை நிர்வாகம் செய்யப் போதுமான நிதி இல்லாமல் தவிக்கும் நிலையில், மறுமுனையில் மக்களுக்கான அடிப்படைத் தேவையான பொருட்கள் கூட இல்லாமல் உள்ளது.
சமையல் எரிவாயு
இந்த மாத இறுதி வரையில் இலங்கையில் அதிகப்படியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருந்தது, இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கி வருகின்றனர். இதேவேளையில் சமையல் சிலிண்டர் விலையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதே நிலை தான் பெட்ரோல், டீசலுக்கும்.
அரபு நாடுகளை ஈர்க்க ரஷ்யா புதிய திட்டம்.. இஸ்லாமிய வங்கி சேவை அறிமுகம்..!
Sri Lanka’s july inflation peaks over 60 percent; Ranil Wickremesinghe Govt Talks for Fund with IMF
Sri Lanka’s july inflation peaks over 60 percent; Ranil Wickremesinghe Govt Talks for Fund with IMF இலங்கை பணவீக்கம்.. ஜூலை மாதத்தில் ரொம்ப மோசம்..!