புதுடில்லி: இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கவும், அமைதியின்மையை ஏற்படுத்தவும் சிலர், மதம் மற்றும் சித்தாந்தம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல மதங்களை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு அமைதி மற்றும் ஒற்றுமை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியை கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. அந்த சக்திகள், மதம் மற்றும் சித்தாந்தம் என்ற பெயரில் மோதலை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றன. இது நாட்டையும் பாதிக்கிறது. நாட்டிற்கு வெளியேயும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை மவுனமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பதை விட வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். நமது நாட்டில் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயல்படுவது பெருமை அளிக்கிறது. இவ்வாறு தோவல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement