இந்திய வர்த்தகச் சந்தையில் அனைத்து துறையிலும் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் நிலையில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
அதிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்கா நிறுவனமான ஆப்பிள் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளது அமெரிக்க நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்திய வர்த்தக வளர்ச்சியைக் கண்டு ஆப்பிள் டிம் குக் புகழ்ந்து தள்ளியுள்ளார். அப்படி எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது…
சீன பணக்கார பெண் யாங் ஹுயான் கண்ணீர்.. 50% சொத்து மாயம்..!!
ஆப்பிள் நிறுவனம்
ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக் ஜூன் காலாண்டின் இந்திய வர்த்தகத்தில் சுமார் 2 மடங்கு அதிக வருவாய் பெற்றுள்ளதாகவும், இந்திய சந்தையில் ஏற்பட்ட மேக்ரோ எக்னாமிக் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
டிம் குக்
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 3 சதவீதமும், மொத்த வர்த்தகச் சந்தையில் 12 சதவீத வர்த்தகத்தையும் பெற்றுள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இரட்டிப்பு வருவாய் வளர்ச்சி
இந்நிலையில் டிம் குக் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது வளரும் நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் பெரிய ஆளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாகப் பிரேசில், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் 2 இலக்க வளர்ச்சி, இந்தியாவில் இரட்டிப்பு வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
லூகா மேஸ்திரி
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான லூகா மேஸ்திரி (Luca Maestri) கூறுகையில் இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் ஆப்பிள் பொருட்களில் அதிகளவில் முதலீடு செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
விப்ரோ
குறிப்பாக விப்ரோ நிறுவனம் ஊழியர்களைத் தக்க வைப்பதற்காக மேக்புக் ஏர் லேப்டாப்-ஐ அதிகளவில் வாங்குவதாகத் தெரிவித்தார். இந்திய ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான ஊழியர்கள் வெளியேறி வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா-வை டார்கெட் செய்கிறதா சீன உளவு கப்பல்..? என்ன நடக்குது..?!
Apple’s revenue in India nearly doubles; Wipro buying more macbook Air to attract and retain employees
Apple’s revenue in India nearly doubles; Wipro buying more macbook Air to attract and retain employees விப்ரோ செய்த வேலையைப் பாத்தீங்களா..? ஆப்பிள்-க்கு வாரி வழங்கிய இந்தியர்கள்..!!