Meta Revenue: சமூக ஊடக உலகை ஒருதலைப்பட்சமாக பேஸ்புக் ஆளுகிறது. பேஸ்புக்கிற்கு போட்டியாக அவ்வப்போது பல நிறுவனங்கள் சந்தைக்குள் நுழைகின்றன. ஆனால், பேஸ்புக் தனக்கென ஒரு நிலைப்பாட்டை எப்போதும் கடைப்பிடித்து வருகிறது.
தற்போது இந்த செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. இதனால் வேறு சில சமூக ஊடக நிறுவனங்களும் பேஸ்புக்கிற்கு கடும் போட்டியை கொடுக்க ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
WhatsApp Scam: வாட்ஸ்அப்பில் நிர்வாணமாக அழைப்பவர்கள் யார்? நீங்களும் வலையில் வீழலாம்!
விளம்பர வருவாய் சரிவு
பேஸ்புக்கின் விளம்பர விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முடிவுகளுக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகள் 4.6 விழுக்காடு வரை சரிந்துள்ளன. இதற்கிடையில், மெட்டாவின் மூன்றாம் காலாண்டு வருவாய் 26 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
மேலதிக செய்தி:
Play Store: கூகுள் நீக்கிய 17 செயலிகள்; உங்களிடம் இருந்தால் உடனடியாக அழித்துவிடவும்!
முன்னதாக மெட்டாவின் வருவாய் 28.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், இந்த வருவாய் சரிவுக்குக் காரணம் என்ன என்பதை நிறுவனம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இதற்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிற சீன நிறுவனங்கள் முழு பலத்துடன் சந்தையில் போட்டியிடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு வருமானம் எவ்வளவு?
Photo Credit: Instagram
கடந்த ஆண்டு காலாண்டின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. ஏனெனில், கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வருவாய் 29.1 பில்லியன் டாலர்களாக இருந்தது.
மேலதிக செய்தி:
Adani 5G: ஜியோ, ஏர்டெல்லை எதிர்கொள்ளுமா அதானி? 5ஜி ஏலம் சொல்வதென்ன?
இருப்பினும் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் எந்த குறையும் இல்லை. நிறுவனத்திற்கு புதிய பயனர்கள் கிடைத்துள்ளனர். தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 1.97 பில்லியனை எட்டியுள்ளது. இருப்பினும், விளம்பர விற்பனையில் மெட்டா பின்தங்கியுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்
இப்போது சந்தை நிலவரத்தைப் பார்த்தால், மெட்டாவுடன் ஒப்பிடக்கூடிய நிறுவனங்கள் நுழைந்துள்ளன. இதன் காரணமாக, சமூக ஊடக பயனர்கள் நிச்சயமாக பிளவுபட்டுள்ளனர்.
மேலதிக செய்தி:
Google Street View: இனி உங்க வாழ்க்கைய ரொம்ப நிம்மதியா வாழலாம் – கூகுள் உங்களுக்கு வழிகாட்டும்!
டிக்டாக் போன்ற பிற நிறுவனங்கள் வந்த பிறகு விளம்பரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் நுழைந்த பிறகு விளம்பரத்தில் ஒரு பெரிய பிரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, மெட்டா தளங்களின் விளம்பர எண்ணிக்கை குறைந்துள்ளது. விளம்பரங்கள் குறைந்ததால் வருமானம் குறைந்துள்ளது.