ரிசர்வ் வங்கி கையிருப்பில் போதுமான அளவில் அந்நியச் செலவாணி: ரகுராம் ராஜன்| Dinamalar

ராய்ப்பூர்: இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் போதுமான அளவிற்கு அந்நியச் செலாவணி இருப்பு இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்று அல்லாமல் ரிசர்வ் வங்கி வசம் போதுமான அளவில்அந்நியச்செலாவணி கையிருப்புஉள்ளது. நமது ரிசர்வ் வங்கி அவ்வப்போது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரித்து வருவகிறது.மேலும் வெளிநாட்டுகடனும் குறைவாக உள்ளது.

latest tamil news

உலக நாடுகள் அனைத்திலும் பண வீக்கம் உள்ளது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்தியாவில் பண வீக்கம் குறைந்து உள்ளது.உணவுப்பொருள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பண வீக்கம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகளில் பண வீக்கம் குறையும் போது இந்தியாவிலும் பண வீக்கம் குறைந்து விடும் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.