அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியுமா? பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிரத்யேக பேட்டி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஜீ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அமெரிக்காவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் பொருள் இல்லை என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறிய பிவாலவல் பூட்டோ சர்தாரி, அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்தியாவுடனான உறவைப் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் கருத்து வித்தியாசமானதாக இருந்தது.

​​“இந்தியா எங்கள் அண்டை நாடு, துரதிர்ஷ்டவசமாக, அண்டை நாட்டை மாற்ற முடியாது. வாழ்க்கையில் பல விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம் ஆனால் நமது அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

இந்த ஆண்டு செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவிருக்கும் எஸ்சிஓ நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தின் போது பாகிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்கள் சந்திப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் சந்தித்ததாகவும், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறிய அவர், பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக குறிப்பிட்டார். 

அதேபோல, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தாகவும், இந்த சந்திப்புகள் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.  

மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகள் எப்படித் தீர்க்கப்படவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தபோதுதான், இந்தியா எங்களுடையஅண்டை நாடு. வாழ்க்கையில் நீங்கள் நிறைய விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் உங்கள் அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுக்க முடியாது. நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஆகஸ்ட் 2019 நிகழ்வு, ஆளும் கட்சியின் அதிகாரிகளின் சமீபத்திய இஸ்லாமிய வெறுப்பு அறிக்கைகள், ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவது போன்றவை எங்களுக்கு கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்கா மீதான வெளியுறவுக் கொள்கையில் அரசு குறைவாக இருப்பதாகக் கூறி விமர்சித்து வருகிறார் என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்தப் பொருளும் இல்லை என்று நான் நினைப்பதாக தெரிவித்தார். 

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை, அனைத்து நாடுகளுடனும் தொடர்பு கொள்வது என்றும், மேற்கு மற்றும் கிழக்கில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், நாட்டு மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | சரித்திரம் படைத்து தங்க வென்ற மீராபாய் சானு!

வெளிப்படையாக, அமெரிக்காவுடன் இணக்கமாக நாங்கள் இருப்பதைப் போலவேதான், இம்ரான் கானும் இருந்தார். அவர் தோல்வியுற்றது எங்கள் தவறு அல்ல, அதற்காக எங்களை குறை செல்வதில் அர்த்தமில்லை என்று தெரிவித்தார். 
பாகிஸ்தானின் பொருளாதார நிலையைப் பற்றி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரிவாக பேசினார்.

பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் கடந்த மூன்று மாதங்களில் உருவாகவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் இம்ரான் கானின் அரசாங்கம் கடனை அதிகரித்ததுதான் இன்றைய நிலைக்கு அடிப்படைக் காரணம். 2018-2022 க்கு இடையில், இம்ரான் கானின் அரசாங்கம் வாங்கிய கடன் அளவு, 1947 முதல் 2018 வரையில், பாகிஸ்தான் வாங்கிய கடனுக்கு சமமானது என்பது முந்தைய அரசின் தவறை அம்பலப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

முந்தைய அரசு ஏற்படுத்திய பொருளாதாரப் பேரழிவை மூன்று மாதங்களில் தீர்க்க முடியும் என்பது சாத்தியமல்ல. நாங்கள், எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் இப்போது நாங்கள் பன்முக சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, ஜூ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.