தற்போதைய எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளால், துவிச்சக்கரவண்டிகளின் பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்களுக்கு பிரத்தியேக ஒழுங்கை முன்னோடித் திட்டத்தை கொழும்பு நகரசபை முன்னெடுத்துள்ளது.
29 ஆம் திகதி கொழும்பு வங்கி அவென்யூவுக்கு எதிரே இந்த முன்னோடித் திட்டத்தை கொழும்பு மாநகர முதல்வர் திருமதி.ரோஸி சேனாநாயக்க ஆரம்பித்துவைத்தார்
வங்கி மாவத்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு பிரத்தியேக ஒழுங்கை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன
வங்கி அவென்யூ முன்னோடித் திட்டத்திற்கு மேலதிகமாக, கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலும் , சைக்கிள் பாதையை ஒதுக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது