கொரோனாவின் வருகைக்கு பிறகு சொந்த தொழில் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிக அதிகரித்துள்ளது.
பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் கூட தங்களது வேலையினை துறந்து, சொந்தமாக தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அப்படி 5 எம்பிஏ பட்டதாரிகள் தாங்கள் அதிக சம்பளத்தில் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டு, தங்களுக்கு பிடித்தமான தொழில் ஈடுபட்டுள்ளனர். அப்படி என்ன தொழில்? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையை தீர்மானிக்க போகும் 5 முக்கிய அம்சங்கள்.. கவனிக்க வேண்டியது என்ன?
எம்பிஏ லிம்பு பானி வானி
எம்பிஏ பட்டதாரியான முகமது ஆரிப் ஹுசைன் லிம்பு பானி வாலா வணிகத்தினை செய்ய நினைத்தபோது, அவரை பலரும் கிண்டலடித்துள்ளனர். பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஏம்பிஏ பட்டதாரியானால் வேலை செய்தே ஆக வேண்டுமா? நான் வணிக படிப்பில் எப்படி ஒரு வணிகத்தினை என நடத்துவது என கற்றுக் கொண்டேன்.
வெற்றிகரமான வணிகம்
அதன் பின்னர் கடந்த 2021ல் ஏம்பிஏ லிம்பு பானி வாலாவை ஆரம்பித்தேன். இதில் சோடா நிம்பு பானி, ப்ளைன் நிம்பு பானி, டிரை ஐஸ் நிம்பு பானி மற்றும் மாக்டெய்ல்கள் என பல புத்துணர்ச்சியூட்டும் பானங்களை விற்பனை செய்தேன். இதன் விலை 30 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற பான ஸ்டால்களை காட்டிலும் தரமான முறையில் கொடுப்பதே என்னுடைய வெற்றியாக உள்ளது என்றும் முகமது கூறியுள்ளார்.
ராம் கி பந்தி
ராம் குமார் ஷிண்டே 1989ல் முதல் தோசை மற்றும் இட்லிகளை வழங்கி வரும் தனது தந்தை லக்ஷிமனின் தள்ளு வண்டியை தொடர வேண்டும் என்று தேர்வு செய்திருக்கலாம். ஆனால் 35 வயதான எம்பிஏ பட்டதாரியான அவர், நல்ல சம்பளத்திலும் ஒரு பணியினை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அது நிரந்தரமானது அல்ல என்ற எண்ணம் என்னிடத்தில் இருந்தது. இதனால் ஒரு தொழிலில் ஈடுபட நினைத்தேன். 2011ல் எனது தந்தையில் தொழிலை செய்ய நினைத்தேன்.
உணவு வணிகத்தில் புதுமை
தனது தந்தையின் இட்லி தோசை மெனுவில் பீட்சாவினையும் அறிமுகம் செய்தார். அதன் பிறகு 70 பேரை பணிக்கும் அமர்த்தியுள்ளார், அதன் பிறகு 1000 பேருக்கு உணவினை வழங்கி வருகின்றது.
நம் உணவை ருசிப்பதற்காக மட்டும் அல்ல, ஒரு தனித்துவமான அனுபவதிற்காகவும் மக்கள் வருகின்றனர். வெளி நாட்டவர்களும் கூட பல்வேறு சுவைகள் அடங்கிய சீஸ் தோசைகளை ருசிக்க வருகிறார்கள். அதோடு விரைவான சேவை, சூடான உணவு, பல்வேறு வகைகளின் மெனு மற்றும் சுமாரான விலை ஆகியவை பலவும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான விஷயங்களாக உள்ளன.
என்ன ஒரு சாண்ட்விச்
33 வயதான எம்பிஏ பட்டதாரியான ஹுசைன் ஜுசர் லோகந்த்வாலாவின் ஒரு எளிய யோசனை தான் அவரை, வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ஹுசைனின் எளிமையான யோசனை தான் மக்களின் ருசியான சான்ட்விச் கிடைக்க வழிவகுத்துள்ளது. ஆரம்பத்தில் தனது குடும்ப தொழிலில் ஈடுபடுவதா அல்லது புதுமையான ஒன்றை தேர்தெடுப்பதா என்பது கடினமான ஒன்றாக இருந்தது. ஆனால் ஒரு போதும் தோல்விக்கும் பயப்படவில்லை. தனது முயற்சியையும் கைவிடவில்லை.
கோடிக்கணக்கில் வணிகம்
2013ல் ஹுசைன் புனேவில் தொடங்கிய வெற்றிகரமான வணிகம், 1.5 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 50 க்கும் மேற்பட்ட டெலிவரி கிச்சன்களை கொண்ட பல கோடி வணிகமாக மாறியுள்ளது. எப்படியிருப்பினும் இறுதியில் தனது மனதுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்த எம்பிஏ பட்டதாரி இன்று வெற்றி கொடி நாட்டியுள்ளார்.
வாழைப்பழத்தில் புதுமையான சிப்ஸ்
2018ல் ஆலாப்பூழாவைச் சேர்ந்த மனாஸ் மது, எம்பிஏ பட்டதாரியாவர், தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையினை விடுத்து, பல்வேறு சுவைகளில் வாழைப்பழ சிப்சினை விற்பனை செய்யும் ஒரு ஸ்னாக்ஸ் -ஐ தயாரிக்க தொடங்கினார். இந்த உத்வேகம், முயற்சி என அனைத்தும் தனது தந்தையை பார்த்து கத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில் மட்டும் அல்ல, பல்வேறு பகுதிகளில் கிடைக்க வேண்டும் என்ற யோசனை வரவே, இன்று 3500-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
மெல் என் ப்ரூ
காஷ்மீர் அதன் சுற்றுசூழல் மற்றும் உணவு மூலம் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இதன் மூலம் பலரின் இதயங்களிலும் நுழைந்துள்ளது. சஜாத் அகமது பட் (40 வயது), பாரதீய வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தவர்.. ஸ்ரீ நகரில் தெரு உணவு கலாச்சாதரத்தை தொடங்க விரும்பினேன். மலிவு விலையில் சுவையான உணவை வழங்க விரும்பினேன். அதனை தான் செய்தேன்.
தெரு உணவு கலாச்சாரம்
நாங்கள் ஒரு நாளைக்கு 80 டெலிவரி ஆர்டர்களை பெறுகிறோம். அதே நேரத்தில் வேன் கவுண்டரில் 150 ஆர்டர்களை பெறுகிறோம். தொடர்ந்து வணிகத்தினை விரிவுபடுத்தவும், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை சென்றடையவும் திட்டமிட்டுள்ளோம். மக்கள் குறைந்த விலையில் ருசியான உணவினை கிடைக்க இது வழிவகுக்கும்.
Self-employment is better than corporate job: See 5 careers of MBA graduates
Self-employment is better than corporate job: See 5 careers of MBA graduates/கார்ப்பரேட் வேலையை விட எங்களுக்கு இது தான் பெஸ்ட்.. 5 எம்பிஏ பட்டதாரிகள் எடுத்த அதிரடி முடிவு!