வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா : தனது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சிக்கிய ரூ.50 கோடி பணம் தன்னுடையது அல்ல என மே.வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில், ஆசிரியர் நியமன ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது தோழியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர். அர்பிதாவின் வீட்டில் நடந்த சோதனையில், 50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக பார்த்தா சாட்டர்ஜி கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் யாரும் சதி செய்துள்ளனரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பார்த்தா சாட்டர்ஜி, அது குறித்து நேரம் வரும் போது கூறுகிறேன். அங்கு கிடைத்த பணம் தனக்கு சொந்தமானது இல்லை எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement