2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கம்

2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது  பதக்கத்தை திலங்க இசுரு குமார பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில்  55 கிலோ எடைப்பிரிவிலேயே இசுரு குமார வெண்கல பதக்கத்தை பெற்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவாகும்.

இங்கிலாந்து பர்மிங்காமில் ‘2022கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்’ வியாழக்கிழமை (28) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. இப் போட்டிகள் ஆகஸ்ட் 8வரை நடைபெறவுள்ளது.

பர்மிங்காம் அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப விழா பல சிறப்பம்சங்கள நடைபெற்றன. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.LGBTQ+ 10 உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்ப நிகழ்வில் மலாலா யூசுப்சாய் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 72நாடுகளை சேர்ந்த மொத்தம் 5054வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கொமன்வெல்த் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் பிரிவுகளை விட மகளிர் பிரிவில் அதிக போட்டிகள்.
நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் வீராங்கனை இந்திக்க திஸாநாயக்க மற்றும் கிரிக்கெட் வீரர் சாமரி அத்தபத்து ஆகியோர் இலங்கை கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் சென்றனர்.

1998காமன்வெல்த் போட்டிக்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் போட்டி, இந்த தொடரில் மீண்டும் ஆரம்பமாகிறது. இதில் இந்தியா,அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் பங்கேற்கின்றன.

ஆரம்ப விழாவின் சிறப்பு அம்சமாக 10அடி உயர அனிமேட்ரோனிக் காளை மைதானத்திற்கு வந்தது. இரும்பு மற்றும் இயந்திரத் தொழில்களுக்குப் புகழ்பெற்ற பர்மிங்காம் மற்றும் கொமன்வெல்த் ஆகியவற்றின் பன்முகக் கலாசாரத்தைக் காட்டுவதே வடிவமைப்பின் நோக்கமாகும்..

பின்னர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் வீராங்கனை இந்திக்க திஸாநாயக்க மற்றும் கிரிக்கெட் வீரர் சாமரி அத்தபத்து ஆகியோர் இலங்கை கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.