வாஞ்சிநாதன் குறித்து மோடி பேச்சு – என்ன பேசினார் தெரியுமா?

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் ரேடியோவில் நரேந்திர மோடி உரையாடுவது வழக்கம். இந்த மாத மான் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் இன்று உரையாற்றினார். அதில் பேசிய பிரதமர் மோடி “நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் தான், 25 வயதே ஆன வாஞ்சிநாதன், பிரிட்டிஷ் கலெக்டர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அடிமைத் தளத்தில் இருந்து விடுதலை அடைந்திடத் துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும்? வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே முழக்கங்களை உச்சரித்த படி, நமது நாட்கள் கழிந்திருக்கும்.

வாஞ்சிநாதன் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தமிழகத்தில் எழுந்திருக்கும் நிலையில் நரேந்திர மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.