இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! அரைநாள் மின்சாரம் தடைப்படலாம்


வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நிலக்கரியின் விலை மும்மடங்கு அதிகரிப்பு

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி!  அரைநாள் மின்சாரம் தடைப்படலாம் | 12 Hour Blackout After September

தற்போது ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையெனவும், தற்போது உலக சந்தையில் நிலக்கரியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து 900 மெகாவோட் மின்சக்தி தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.