புதுடில்லி: பென்சன் வாங்குபவர்கள், எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்காக முகம் பதிவு செய்தல் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பென்சன் வாங்கும் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். இதனை செய்தால் தான் பென்சன் தொடர்ந்து கிடைக்கும். பென்சன் வாங்கும் முதியவர்கள், அலைச்சலை தவிர்க்கும் வகையிலும், வாழ்நாள் சான்றிதழை எளிதாக சமர்ப்பிக்கும் வகையிலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு இபிஎப்ஓ நிறுவனம் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், இபிஎப்ஓ நிறுவனத்திடம் பென்சன் வாங்குவோர், முகம் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சமர்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடந்த இபிஎப்ஓ அறங்காவலர் குழுவின் 231வது கூட்டத்தில், முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வசதியாக 65 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு நம்புகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement